பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

133


எதற்காக விடுத்தான் அந்த மாமன்னன் அதை?

‘வெசேலியஸ் மருத்துவத்துறையிலேயே மாமேதை. அதிலே எதுவும் ஐயமில்லை. அவரது கண்டு பிடிப்புகள் மனித குலம் வாழ்வதற்கு வழங்கிய அறிவுப்பரிசுகள் - அதிலேயும் ஏதும் ஐயமில்லை!

அறிவுலகமும் அறிவியல்உலகமும் அவரது சிந்தனையின் ஆற்றலை உண்மையாக மதிக்கிறது என்றால் வெசேலியசை ஏதாவது ஒரு நிபந்தனையின் மீது இரக்கம் காட்டி மன்னிக்க வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானம் தூற்றாது’ என்று போராடினார்.

மன்னன் விடுத்த வேண்டுகோளை அவ்வளவு சுலபமாகப் புறக்கணிக்கக் கூடாது என்று அந்த வார்த்தையை ஏற்றார்கள்.

மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

ஆனால் நிபந்தனை தலைத்தூக்கி நின்றது. அதை யோசிப்போம் என்று கூறி வெசேலியசை - அறிவுலக அரசனை மதகுருமார்கள் கராக்கிரகத்திலே அடைத்தார்கள்.

கடுமையான சிந்தனையால் ஏற்கனவே உடல் தளர்ந்த அந்த அறிவு நாயகன், கராகரத்தின் சித்திரவதையால் மேலும் உடல் தளர்ந்தார், உள்ளம் நொந்தார்.

“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்ற இலக்கணத்திற்கேற்ப அவர் சிறிய வயதிலேயே அரிய சாதனைகளை உருவாக்கியதைக் கண்டு, அழுக்காறு கொண்ட மனித இனம், ஒயாமல் அவரை வசைமாரி