பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

135


புனித யாத்திரையா அது? அல்ல - இறுதி யாத்திரை! பெரும் பயணம்!

தள்ளாத வயதாலும், பழிகாரர்களால் அளவில்லாமல் கூறப்பட்ட பழிகளால் தளர்ந்து போன நெஞ்சத்தாலும் ஓயாது சிந்தனை செய்து செய்து ஒய்ந்துபோன எண்ண விரக்தியாலும் காராக்கிரக வாசத்தால் ஏற்பட்ட கடுமையான நோயின் களைப்பாலும், அந்த மருத்துவமேதை, மனித தெய்வம்-அனாதையாக, கி.பி.1564ஆம் ஆண்டில் எங்கே செத்தார்? எப்படி செத்தார்? என்பதற்குரிய எந்த விபரமும் விளக்கமுமின்றி பாவம் இறந்தார்!

மனிதஇன உடற்கூறு இயலுக்கு புதிய ஒளியை ஏற்றிய அந்த அறிவியல் ஞானி எங்கோ மறைந்தாலும் உலகின் மருத்துவத் துறையிலே அவர் மறையாத கதிரவனாக ஒளி வழங்கி வாழ்ந்து வருகிறார்.

ஆண்ட்ரியஸ் செவாலியர், மக்கள் வாழ வழி காட்டிய அறிவியல் ஆசான்! மருத்துவத் துறைக்கு புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிய மாண்புமிக்க மேதை! உலக மனித இனம் வாழ தனது வாழ்வையே உருக்கு நீராய் கரைத்துவிட்ட அறிவு வத்தியாக விளங்குகிறார். வாழ்க செவாலியஸ் தத்துவங்கள்!