பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


இலவாஸ்யே காலத்தில், தீ எரிவதைப் பற்றி மேதைகளிடமும் ஒரு கொள்கை நிலவிவந்தது.

தீ அழிக்கும் தன்மையுடையது என்று மக்களிலே பலர் நம்பி வந்தனர்! நெருப்பு அழிக்கும் தன்மையுடைதல்ல. அது, ஆக்குந்தன்மை உடையது என்று சிலர் கூறி வந்தனர்.

இந்த கொள்கையை ஃபலோஜிஸ்ட்டான் என்று அக்கால மக்கள் அழைத்து வந்தனர்.

தீ. பற்றி எரியக் கூடிய ஒவ்வொரு பொருளிலும் ஃப்லோஜிஸ்ட்டான் என்னும் பொருள் அதிகமாகப் பெற்றிருந்தது ஆனால் அது எப்படி என்பது யாருக்கும் தெரியாது.

ஒருவரும் அதைக் கண்ணால் காணா விட்டாலும், ப்லோஜிஸ்ட்டான் என்ற பொருள் என்னவோ தீயில் கலந்திருப்பது உண்மையே என்ற எண்ணம் அப்போது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

ஆக்சிஜனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜோசஃப் பிரீஸ்ட்டிலியும் கூட ஃப்லோஜிஸ்ட்டான் என்ற ஒரு பொருள் தீயிலே இருப்பதை உறுதியாக நம்பியிருந்தார்.


ஒரு பொருள் தீ பிடித்து எரியும் போது, அதிலே இருந்து தீ நாக்குகள் சுவாலைகளாக உயர்ந்து உயர்ந்து, எழுந்து நின்று எரிகின்றன.

எரியும் பொருள், அதிலே இருந்து ஏதோ ஒன்றை இழப்பதாகவே விஞ்ஞானிகள் நினைத்தனர்.