உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


அவ்வளவுதான் விஞ்ஞானிகளிடையே எழுந்தது பொறாமை! தொழிற் காய்ச்சல் விசுவரூபம் எடுத்தது.

தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவியை ஒரு பெண்ணுக்குக் கொடுத்து எங்களை அவமானப்படுத்துவதா? என்ற கண்டனக் குரலை விஞ்ஞானிகள் எழுப்பினார்கள்.

வேறு சிலர், மனம் கொதித்து எழுந்து விதவை விஞ்ஞானியாவதா? என்று ஆர்ப்பரித்தார்கள்.

போயும், போயும் அறிவியல் துறைப் பதவியை ஒரு விதவைக்குத் தரலாமா? என்று சீறிக் கேட்டனர்.

விஞ்ஞானத்துக்கு விதவை ஆற்றும் சேவையை விட எங்கள் தொண்டு அவ்வளவு கீழ்த்தரமாகவா போய் விட்டது? என்று கூட்டம் கூட்டி இழித்தும் பழித்தும் பேசினர்.

மன்றங்களைக் கூட்டி விவாதம் செய்த விஞ்ஞானிகள் எல்லாம், மேரி கியூரி பேராசிரியர் பதவி ஏற்பதைச் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக்கி விட்டனர்.

பிரான்ஸ் நாடு ஒரு பெண்ணுக்கு அந்தப் பதவியை தந்தது ஆண்களை வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் என்று சிலர் அகம்பாவத்தோடு கூக்குரலிட்டனர்.

யார் யார் மேரிகியூரி மீது வசையம்புகளை எய்ய முடியமோ, அவர்கள் எல்லாம் கண்டபடி கண்ட இடத்திலே பேசி, அந்த அம்மையாரின் உள்ளத்தை நோகடித்து சல்லடையாக்கி விட்டார்கள்.