பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் துறையில், மனதால் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு அபூர்வ சாதனைகளைச் சாதித்த விஞ்ஞானத் தெய்வங்களை, உயிரோடு இருக்கும்போது உதாசினப்படுத்தியது- செத்தப் பிறகும் அவர்களுள் சிலரை அவமானப்படுத்தியது- இந்தச் சமுதாயம்!

சமுதாய முன்னேற்றத்திற்காக, நல்ல பல கருத்துக்களைச் சிந்தித்து வெளியே கூறியவனைக் கற்களால் அடித்து, இரத்த காயங்களை உண்டாக்கி, அந்த அறிவியல் சிற்பி இரத்தம் ஒழுக ஒழுக ஒடும்போது பார்த்துக் கை கொட்டிச் சிரித்திருக்கிறது - இந்தச் சமுதாயம்!

நடு வீதியிலே கல்லடிப்பட்டு ஓடியவனை, அவன் வீட்டிலே சென்று தேடினார்கள் - அறிவின் பகைவர்கள். கிடைக்கவில்லை அந்த விஞ்ஞானி!

அந்த ஆத்திரத்தால், அவன் வாழ்ந்த வீட்டினையே நெருப்பு வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கி இருக்கிறார்கள்.

மனித குலத்தையே வாழ்விக்க வந்த அறிவியற் சிற்பிகளின் இத்தகைய சோக வரலாற்றை, "விஞ்ஞான வித்தகர் வரலாறு" என்ற இந்த நூல் மெழுகு வர்த்தியாக நின்றுருகி, ஒளி விளக்காகத் திகழ்கின்றது.

அந்த அறிவியல் ஒளியிலே நமது இதயத்தையும் உருக்கி, மறைந்த அந்த மாமேதைகளுக்காக ஒரு துளி கண்ணீரையோ, அல்லது அனுதாபத்தையோ - காணிக்கையாக்குவோமாக !

இந்த மனிதாபிமான மன நெகிழ்வுகளை நூலாக உருவாக்கித் தந்த அறிஞர் அண்ணா எழுத்தகத்தாருக்கு,

எனது நன்றி வணக்கம்

என்.வி. கலைமணி

என்.வி. கலைமணி