பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

19


அவ்வாறு எரிகின்ற பொருள், இழப்பதாகக் கருதுவது தான் ஃப்லோஜிஸ்ட்டான் என்பதாகும் என்று அறிவியல் அறிஞர்கள் அன்றுவரை அதற்கு விளக்கம் தந்து வந்தார்கள்.

இலவாஸ்யே ஆராய்ச்சி, இவ்வாறு கூறிய விஞ்ஞானிகளின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பமாயிற்று.

ஒரு சிறு பாத்திரத்தினுள்ளே பாதரசத்தை சரியான அளவோடு அளந்து ஊற்றினார். அதை ஒரு சிறு சாடியோடு இணைத்தார்.

இவ்வாறு இணைப்பதற்கு முன்பு, சாடியிலே இருந்த காற்றையும் அளந்து கணக்கிட்டுக் கொண்டார்.

அந்த சாடிக்குள் வெளியே இருந்து புதிய காற்று ஏதும் புகாதவாறு, பாதரசம் நிரம்பிய தொட்டியிலே அதைக் கவிழ்த்து வைத்தார். பிறகு, பாத்திரத்திலே இருந்த பாதரசத்தைச் சூடேற்றினார்.

பாதரசத்தின் ஒரு பகுதி, செந்நிறமான பொடியாக மாறுவதைக் கண்டார். சாடியினுள்ளே இருந்த பாதரசம் அளவு, சிறிது சிறிதாக உயர்வதைப் பார்த்தார். அதே நேரத்தில், அதன் உள்ளிருந்த காற்று சிறிது சிறிதாகக் குறைந்து வருவதையும் கண்டார்.

தனது ஆய்வை இவ்வாறே தொடர்ந்து பல நாட்கள் செய்தார். நாளாக வாக அந்த பாத்திரத் திலோ, சாடியிலோ எவ்வித மாற்றமும் நிகழ வில்லை என்பதை உணர்ந்தார்.