பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


படைக்கவும் முடியாது" என்ற அவரது அறிவியல் சாதனையின் விதிதான், இப்போது வழங்கி வரும் இரசாயனக் கண்டுபிடிப்பு விதிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

மற்ற விஞ்ஞானிகளும், அதனையே பின்பற்றி பிற ஆராய்ச்சிகளையும் நடத்தி வருவதாகக் காண்கிறோம்.

ஆக்சிஜன் என்ற பெயர் கிரேக்க மொழியை மூலமாக உடைய சொற்களாகும். ஆக்சஸ்= என்றால் அமிலம், ஜென்னன், என்றால்= இயற்றுதல்-என்ற பொருளையுடைய சொற்களாகும். அதாவது அமிலத்தை இயற்றுதல் என்று பொருளாகும்.

அவர் கண்டு பிடித்த இதே ஆக்சிஜனைக் கொண்டே, வேறொரு ஆராய்ச்சியையும் அவர் நடத்தினார்.

ஆக்சிஜன் காற்றிலே ஒரு வைரத்துண்டை எரித்துப் பார்த்தார். அதன் விளைவாக ஏற்பட்ட விஞ்ஞான சாதனை என்ன தெரியுமா? அதுதான் கார்பண்டை ஆக்சைடு என்பதாகும்.

நாம் உண்ணும் உணவு உடலுக்குள் சென்று விரைவாகச் செரித்து விடுகின்றதே, அது எப்படி என்பதையும் இலவாஸ்யே சிந்தித்தார். அதற்காக அவர் பல பெருச்சாளிகளை அறுத்துச் சோதனை செய்து பார்த்தார்:

ஒரு பெருச்சாளி எவ்வளவு ஆக்சிஜன் காற்றை உள்ளே இழுக்கிறது? எவ்வளவு கார்பண்-டைஆக்ஸைடை வெளியே விடுகிறது? என்பதையும் கணக்கிட்டார்.