பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

27



அந்த வேலையை அவர் ஏற்றுக் கடமைகளைச் சரிவரச் செய்து வந்ததைக் கண்டு மாராவுக்குப் பொறாமை ஏற்பட்டது.

ஏற்கனவே, அவன் நூலைத் திருப்பி அனுப்பி விட்ட பொறாமை எரி நெருப்புக்கு, அவரது பதவியின் பெருமை எண்ணெய் ஊற்றியது போல ஆயிற்று.

இதை அறிந்த இலவாஸ்யே, மக்களுக்கு மரியாதை யுடனும் மதிப்புடனும் ஆற்றி வந்த அந்தப் பதவியினையே துக்கி எறிந்து விட்டார்.

இருப்பினும், அந்தப் பதவிக் காலத்தையே காரணம் காட்டிக் காட்டி லவாஸ்யேவைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தான் மாரா !

"தீர்வை வசூலித்தவர் எல்லாம் திருடர்கள்கொள்ளைக்காரர்கள்- மக்களைப் பறிமுதல் செய்தவர்கள் என்றெல்லாம் கடுமையாகப் பேசி கலகம் மூட்டி வந்தான் மாரா.

சமயம் பார்த்துக் கொண்டே இருந்த அவன், ஒரு நாள் திடீரென்று லவாஸ்யேவையும் அவரது மாமனாரையும் உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்குமாறு உத்திரவிட்டான்.

இந்தக் கைது எப்போது நடந்தது தெரியுமா? மக்களது உடலுக்குள்ளே சென்ற உணவுப் பொருட்கள் எரிந்து எப்படிக் கழி பொருளாகிறது? அதை அளப்பது எப்படி என்பதை அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதுதான். கொடுங்கோலன் மாரா அனுப்பிய ஆட்கள் அவரைக் கைது செய்து