பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ⃞

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


நாட்டு மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலர்களது ஆட்சி, மும்மரமாக இருந்த சமயம் அது.

அதனாலே, அந்த விஞ்ஞானியின் பரிதாப நிலையைக் குறித்து யாரும் பேசவே அஞ்சினார்கள்-மக்களும் ஊமைகளாகக் கிடந்தார்கள்.

அதே நேரத்தில், அறிவுக்கு நன்றி காட்டும் அறிஞர்களிலே சிலர், அவரது அற்புத சாதனைகளை எடுத்துக்காட்டி, அந்தக் கண்டு பிடிப்புக்களால் பிரான்ஸ் நாடு பெற்ற பெருமையைக் கூறி, பிரெஞ்சு விஞ்ஞான அகெடெமி சார்பாக, லவாஸ்யேவை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

உலகத்துக்கே மூலாதாரமான அறிவியல் விதிகளை உருவாக்கிய மேதையை அழிக்க நினைப்பது விஞ்ஞான உலகத்துக்கே சாபக்கேடு என்று அவர்களிலே சிலர் தனித் தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர்.

பிரான்ஸ் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பாடுப்பட்ட ஒர் அரசியல் அறிஞனை பிரெஞ்சு நாட்டுப் பொருளாதார வீக்கத்தை ஒழிக்க, உலக நாடுகளிலே இருந்து வெடிமருந்து தயாரிப்பு மூலமாக பெரும் வருவாயைத் தேடித் தந்த, ஒரு தேசபக்தனை, விடுதலை செய்தாக வேண்டுமென்று, அக்கால அரசியல் மேதைகளிலே சிலர் நெஞ்சுருக்கும் அறிக்கைகளை விடுத்தனர்!

விவசாயத் துறையிலே பெரும் ஆராய்ச்சி செய்து, பிரான்ஸ் நாட்டின் விவசாயப் புரட்சிக்கு வித்திட்டு, வளமான பண்ணைகளை நிறுவிட வழிகோலிய