பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞33


இன்றைக்கு இராசயானத் துறையிலே வழங்கி வரும் விதிகளுக்கெல்லாம் அடிப்படைச் சூத்திரமான 'நம்மால்' எதையும் இழக்கவும் முடியாது படைக்கவும் முடியாது" என்ற அறிவுத் தத்துவத்தைக் கண்டுபிடித்து, விஞ்ஞான உலகுக்குக் கொடையாக ஈந்த அறிவு வள்ளலை, அக்கிரமக்காரன் மாரா அநியாயமாய்ப் படுகொலை செய்து விட்டான்.

'நீர் என்பது ஆக்சிஜன் - ஐட்ரஜன் என்ற இரண்டு வாயுக்களாலான ஒரு கூட்டுப்பொருள் என்பதை முதன் முதலில் அறிவியல் துறைக்குப் பரிசாகத் தந்த அறிவு ஜீவியைப் படுபாவிமாரா இரத்தம் சொட்டச் சொட்டத் தலையை வெட்டி எறிந்து விட்டான்.

மனித உடலினுள்ளே எரிதல் என்னும் நிகழ்ச்சி, ஒய்வு ஒழிச்சலின்றி நடந்து கொண்டே இருப்பதால் தான், உடலிலே வெப்பம் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை முதன் முதலாகத் தன் விஞ்ஞான ஆய்வாலே கண்டறிந்து உலக்குக்கு கூறிய விவேகியை, அகம்பாவி மாரா உருக்குலைத்து அவரது உயிரைக் கொய்து விட்டான்.

விவசாயத் துறைக்கும், விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறி, அதைத் தனது பண்ணையிலேயே செய்து காட்டிய வெற்றிச் செல் வனை, பிரெஞ்சு நாடு, வெட்டி வெட்டி வேடிக்கைப் பார்த்துத் தனது சுயநல வெறியைத் தீர்த்துக் கொண்டது.

தரமான வெடி குண்டுகளை பிரான்ஸ் நாட்டால் தயாரிக்க முடியும். அதைப் பிற நாடுகளுக்கு விற்றுத் தாய் நாட்டின் பொருளாதார வீக்கத்தைத் தடுக்க