பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

35


தூக்கி எறியுமாறு அவன் உத்திரவிட்டு விட்டானாம்.

எவ்வளவு வஞ்சம் அவன் உள்ளத்திலே பேயாட்டம் ஆடியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். எத்தகைய கொடுரம் அவனது மனத்திலே குடி கொண்டிருந்திருக்கும்- சிந்தித்துப் பாருங்கள்.

நமது நாட்டுக் கதைகளிலாவது, உண்மையைக் கூறியதற்காக அரிச்சந்திரனுக்கு இறுதியிலே சுக போகங்களும் - கடவுள் அருளும் கிடைத்தன என்று படித்து ஓரளவு ஆறுதலாவது அடைகின்றோம்.

ஆனால், உண்மையை மட்டுமே கூறியதற்காக, ஒரு விஞ்ஞானிக்குக் கிடைத்த தண்டனையை எண்ணிப் பார்க்கும் போது, நமது இதயக் கண்களெலாம் இரத்தக் கண்ணிரையல்லவா சிந்திக் கொண்டிருக்கிறது.

கி.பி.1796 ஆம் ஆண்டு, அந்த அறிவியல் மாமேதையின் தலை துண்டிக்கப்பட்ட இரண்டாண்டுகள் கழித்து, அந்த அறிவு தெய்வத்திற்கு பாராட்டுவிழா என்ற பெயரில் ஈமச் சடங்குகள் நடைபெற்றனவாம்! அதாவது - நீத்தார் நினைவு நாளாம்!

கொடுங்கோலன் மாரா, அவரைக் கொலை செய்து விட்டு, ஈமச் சடங்குகளைக் கூடச் செய்யக் கூடாதவாறு தடுத்திருக்கிறான் என்றல்லவா இதனால் தெரிகிறது.

ஆண்ட்வான் லோரான் இலவாஸ்யேவுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கு விழாவிலே, அவரது மனைவி மாரியும், உற்றாரும் சுற்றத்தாரும், அழுது கண்ணீர் சிந்தியபடியே நின்றனர்!