பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ⃞

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


வாயில்லாப் பூச்சிகளைப் போல நின்று கண்ணீரைக் காணிக்கையாக்கிய அந்தக் குடும்பத்தைக் கண்டு - குவலயமே கண்ணிர் சிந்தியது.

விஞ்ஞான உலகுக்கு அரும்பாடு பட வந்த அறிவின் தூதர்கள் எல்லாம், அந்த விழாவிலே அமைதியாக நின்றபடியே தங்களது கண்ணிரைச் சிந்தி கற்சிலைகளாகக் காட்சியளித்தார்கள் கொடுங்கோல் ஆட்சியின் முன்னே வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்!

விஞ்ஞானத் துறைக்கு விடிவெள்ளியைப் போல விளங்கிய உழைப்பின் நாயகனுக்குக் கிடைத்த பரிசு இது தானா என்று எண்ணிய உலக விஞ்ஞானிகள் மட்டும்- எதற்கும் அஞ்சாமல் லவாஸ்யேவினுடைய அரிய உழைப்பால் இந்த அவனி பெற்ற பயன்களை விளக்கிப் பெருமையோடுப் பேசினார்கள்! பேச்சா அது? அவரவர்களின் அறிவு அழுத அவல ஒசையல்லவா!