பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


அயராது பாடுபட்டார்கள். அவர்களிலே ஒருவர் ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் ஞானி!

அவர் நெஞ்சிலே நேர்மையுடையவர், எதற்கும் அஞ்சாது ஏற்றமிகு செயல்களைப் புரிந்திடும் ஏறு!

"எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்ப திழுக்கு" என்ற திருவள்ளுவரது எண்ணத்திற்கேற்ப, அவர் விஞ்ஞானத் துறையில் செய்த எந்த ஆய்வையும் எண்ணி எண்ணியே செய்யும் திறன் பெற்றிருந்தார்.

தனக்கு முன்பு யார் யார், எந்தெந்தத் துறைகளிலே என்னென்ன எண்ணியெண்ணி, உலகம் வாழ்வதற்காக உழைத்தார்களோ, அவற்றையெல்லாம் ஆர்க்கிமிடீஸ் சிரமம் பாராமல் சீர் தூக்கிப்பார்த்துத் தொகுத்துத் தொகுத்து உலகுக்குக் கூற திரட்டி வந்தார்.

அவற்றை எல்லாம் தனது அறிவுக்கும் - சிந்தனைக்கும் உரமாகப் போட்டுக் கொண்டதால் தான், ஆர்க்கிமிடீசின் சிந்தனை வயலிலே ஏராளமான ஆராய்ச்சிச் செல்வங்களை உலகம் அறுவடை செய்து கொண்டு வருவதைக் காண்கின்றோம்.

உதாரணமாக உரைப்பதென்றால், ஒரு நாள் ஆர்க்கிமிடீஸ் ஒரு நீர்த்தொட்டியிலே நீராடி விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவரது உடல் தூய்மையாக இருந்தது. அதே நேரத்தில் அவர் சிந்தனையிலும் ஒரு கருத்து மின்னி மின்னிச் சுழன்ற படியே இருந்தது.

அந்த அரிய சிந்தனையிலே சுழன்ற கருத்தைத்தான்