புலவர் என்.வி.கலைமணி
⃞39
இப்போது நாம் அடர்த்தி எண் என்று அறிவியல் துறையிலே அழைக்கின்றோம்.
நீராடச் சென்ற மேதையின் சிந்தனை, நீராடி விட்டு மட்டுமே வாராமல், அந்த நீராடலிலே நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து, நீண்ட தோர் ஆராய்சியை செய்ததினாலே விளைந்த விதியின் பெயரே, அடர்த்தி எண் என்ற விதியாக அறிவியலிடை யே இன்றும் நடமாடிக் கொண்டிருக்கிறது.
இதுபோன்று ஆர்க்கிமிடீஸ் எந்த செயலைச் செய்ய எண்ணுகின்றாரோ, அந்தச் செயலே தமது அறிவியலின் ஆய்வுக்குரிய அடிப்படையாக அமையுமா என்று எண்ணக்கூடிய திண்ணிய எண்ணத்தவராக விளங்கினார்.
அதற்கு காரணம், சிசிலித் தீவிலே வாழ்ந்த சைரக்யூஸ் ஃபைடியாஸ் என்னும் கிரேக்க வானநூல் மேதைக்கு அவர் மகனாகப் பிறந்தது தான்
அவருடைய தந்தை, தனக்குள்ள வானநூல் புலமையைத் தனது மகனுக்கும் கற்றுக் கொடுத்தார்.
அக்காலத்தில், அலெக்சாண்டிரிய நகரில் புகழ் பெற்று விளங்கிய கணிதக் கல்வி நிலையத்திலேயே, அவரைக் கணிதக்கலையைக் கற்கவும் வைத்தார்.
கணித இயலின் புகழ் சிகரத்திலே வீற்றிருந்த கிரேக்க மேதை யூக்லிட் என்பவரின் மாணவரும், அந்த நேரத்திலே கணிதவியலுக்கே தலைசிறந்த ஆசான் என்ற பெயர் பெற்றவருமான சீனான் என்ற