பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


சாம்பலை அப்புறப்படுத்தும் கருவிகளிலும், அவரது தத்துவத்தைப் பயன்படுத்தி வருகின்றோம்.

ஒவ்வொரு வீட்டிலும் இன்று இந்த முறையை நாம் பயன்படுத்துகிறோம். இறைச்சி போன்ற பல பொருட்களை அரைத்துத் தரும் கருவியிலும் இதே தத்துவம் உபயோகமாகி வருவதைக் காண்கிறோம்.

அதற்குப் பிறகு தான் ஆர்க்கிமிடீஸ் நெம்பு கோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.

நெம்புகோல், மிகச் சாதாரணமான கருவியாக நமது கண்களுக்குப் புலப்பட்டாலும், மனிதன் தசை விசையின் மூலமாக இந்தத் தத்துவச் சக்தியைப் பெருக்கி, மிகப்பெரிய பாரமான கனங்களையும் இயக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற்றுவிட்டோம்.

நெம்புகோலின் தத்துவத்தை அவர் ஒர் இடத்தில் சோதனை செய்து மக்களுக்குக் காட்டினார்.

வியப்பூட்டும், இந்த விந்தையைக் கண்ட மக்கள், அப்போதும் இந்த உண்மையை அவர் எப்படிக் கண்டு பிடித்தார் என்று சிந்திக்கவில்லை.

வழக்கம் போல வசைவுச்சாக்கடையிலே கையைத் திணித்துத் திணித்து, அவர் மீது வாரியிறைத்தனர் சேற்றை!

ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்கும் போதெல்லாம், அவர் மக்களுக்கு அதைத் தவறாமல் செய்துகாட்டிக் கொண்டே வந்தார்.

அவரைச் சுற்றியிருந்த அவ்வூர் மக்கள், ஆர்க்கி-