பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


கூறியவாறே, ஆர்க்கிமிடீஸ் குடியிருக்கும் திக்கையே பாராமல் போய்விட்டார்கள்.

அவர்கள் பேசியதை எல்லாம் காதாறக் கேட்டார் ஆர்க்கிமிடீஸ். மனம் நொந்தார். ஆனால், அவர் அறிவு தளரவில்லை.

இனி, இவர்களிடம் நாம் எதையும் கூறவோ, நமது சாதனையைச் செய்து காட்டி அற்ப மகிழ்வைப் பெறவோ கூடாது என்ற முடிவுக்கே வந்து விட்டார் ஆர்க்கிமிடீஸ்!

அவர், அந்த ஊராரிடம் அவ்வளவு ஏச்சுக்கள் பேச்சுக்கள், எதிர்ப்புக்கள், கேலிகள், அவமானச் செயல்கள் அத்தனையும் பெற்றதினாலேதான் இந்த பரிதாபமான முடிவுக்கு வரும் நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது, பாவம்!

இருந்தும், மக்களுக்குப் பயன்படும் விஞ்ஞானத் துறையிலே, அவர் பற்பல வித்தைகளைச் செய்தார். ஆனால், அதன் அருமையை பெருமையை அவரது ஊராரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆர்க்கிமிடீஸ் முகத்தைப் பார்ப்பதே மாபெரும் பாவம் என்ற முடிவுக்கு வந்த அந்த ஊர் மக்கள், அவர் வாழும் பகுதியிலேயே அவரை நடமாட விட மறுத்து விட்டார்கள்

ஒருவேளை, ஒரிருவர் தப்பித் தவறி அவரது சோதனைக் கூடம் ஒரம் வரும் நிலை ஏற்பட்டு விட்டால், வந்தவர்கள் அந்த வீட்டையே திரும்பிப் பார்க்க மாட்டார்கள். கண்களையே இறுக மூடிக் கொள்வார்கள். முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள்.