பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞⃞45


இந்த காட்சிகளை எல்லாம் கண்ட அந்த ஞானி, அந்த ஊரையே பொருட்படுத்தாமல், தனது பணியினையே கண்ணுங் கருத்துமாய் செய்து வந்தார்.

முன்னிலும், தீவிரமாகத் தன் பரிசோதனை வேட்கையை முடுக்கிவிட்டார். அந்த தீவிரமானது, வட்டத்தைச் சதுரமாக்குதல் என்ற ஆராய்ச்சியிலே கொண்டு போய்விட்டது.

வட்டத்தின் பரப்பளவைச் சிறிதும் பிழையின்றி அளப்பது எப்படி என்பதைக் கணக்கிடலானார்.

விஞ்ஞானம், இன்று வரை உலகிலே வியத்தகு விளைவுகளை எல்லாம் விளைவித்திருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.

ஆனால், ஒரு வட்டத்தைத் திருத்தமாக அளப்பதற்குரிய கணித அளவை மட்டும், இன்று வரை திட்டவட்டமாக, இது தான் கணக்கு என்று விஞ்ஞானத்தால் வரையறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

ஒரு வட்டத்தின் பரப்பளவு என்பதற்குச் சமம் என்கிறது அறிவியல். இந்த அளவு, திருத்தமான கணித அளவுக்கு மிக நெருக்கமான அளவே தவிர, சரியான-குறிப்பிட்ட அளவல்ல.

ஐஐ (பை) என்று கூறப்படும் கிரேக்கச் சொல்லின் மதிப்பு, சுமார் 31416 என்பதாகும். இந்த இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானத்தால் கூட இந்த எண்ணை முழுத் திருத்தமாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை.


ஆனால், இன்றைக்கு 2200 ஆண்டுகட்கு முன்பு