பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


வாழ்ந்த மாபெரும் விஞ்ஞான, கணித மேதையான ஆர்க்கிமிடீஸ், ஐஐ (பை) என்பது சுமார் 31408க்கும் 3.1429க்கும் இடையே உள்ளது என்று அழுத்தந் திருத்தமாக அளந்து கணக்கிட்டுக் கூறியிருக்கிறார் என்றால், இந்த அறிவின் திறமையை, அற்புத ஆராய்ச்சியின் பெருமையை எப்படி நாம் பாராட்டி மகிழ்வது என்றே தெரியவில்லை.

இத்துடன் மட்டுமா இந்த அறிவியல் அறிஞர் நின்றார்? இல்லை, ஜியோமதிக் கணிதத்திலும் விந்தைகள் பலவற்றைச் செய்து காட்டியிருக்கிறார்!

கோளங்கள், கூம்புகள் ஆகியவற்றின் வெட்டு முகங்களின் தன்மைகளைப் பற்றிப் பல ஆராய்ச்சிகளைக் கண்டு கூறியுள்ளார்.

அந்த கால்குலசைக் CALCULUS கண்டு பிடித்து, துண்கணித இயலுக்குப் பெருமை தேடித் தந்தவரே, ஆர்க்கிமிடீஸ் தான் என்றால் விந்தையாக அல்லவா இருக்கிறது?

ஆர்க்கிமிடீஸ் சுருள் என்று கூறப்படும் சுருள் வடிவத்தை நாம் இன்றும் கற்று வருகிறோம். அல்லவா?

அந்த கணிதப் பிச்சையை அறிவுலகுக்குப் போட்டவரே நமது ஆர்க்கிமிடீஸ் தான்.

திடீரென்று ஒருநாள் நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி எரி படைகளை வீசும் கருவிகளைக் கண்டு பிடித்தார்.

அந்த கருவியைக் கண்டுபிடித்ததும், அதனைத் தனது ஊருக்கு வெளியே சென்று, ஒரு பரந்த திடலிலே சோதனை செய்து பார்த்தார்.