பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


ஆலிங்கனம் செய்து கொண்டான் அப்படியே அவ்வளவு மரியாதையைத் தந்தான் அந்த விஞ்ஞான மேதைக்கு.

ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்த போர்க் கருவிகளைச் செய்து தருமாறும்- அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும்- ஆள்வோன் கூறினான்.

ஒப்புக் கொண்டார் விஞ்ஞானி சக்தி வாய்ந்த எரிபடைக் கருவிகளையும் - இயந்திரங்களையும் செய்து தந்தார்.

கி.மு.215 ஆம் ஆண்டில், ரோமானியப் படை களிடமிருந்து சைரக்யூஸ் நகரைப் பாதுகாக்க, ஆர்க்கிமிடீஸ் தான் கண்டுபிடித்த வெடிகுண்டுகளை இயந்திரங்களை அப்போது நடைபெற்ற போரிலே பயன்படுத்தினார்.

ரோமானியப் படைகள், அந்தத் தாக்குதல்களைத் தாங்காது படுநாசமாயின. ஒடின தலைகால் தெரியாமல் புறமுதுகிட்டப்படியே.

ஆர்க்கிமிடீசின் எரி படைக்கருவிகளது சக்தியைத் தாங்க முடியாமல் அந்த படைகள் முழுவதும் திணறி ஓடிவிட்டனவாம்.

தான் வாழ்ந்த சொந்தநகரை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அவர் பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தகைய சக்தி பெற்றவை என்றால், கிரேக்க மன்னனது பெருஞ் செல்வத்திலே தயாரான வெடிகுண்டுகள் எத்தகைய சக்தி பெற்றவைகளாக இருந்திருக்குமோ.