பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞⃞51


தான். தன்னந்தனியாக நின்று ஆர்க்கிமிடீஸ் தான் கண்டுபிடித்த எரிபடைக் கருவிகளைக் கொண்டும், இயந்திரங்களைக் கொண்டும், ஓட ஓட புறமுதுகிட வைத்து விரட்டினார்!

அந்தப் படைகளுக்கு அன்றும் தளபதியாக இருந்தவன் இதே மர்சேல்ஸ் தான். எனவே, அவன் ஆர்க்கிமிடீசின் விஞ்ஞானச் சாதனைகள் மீது நம்பிக்கை வைத்திருந்தான்.

அந்த விஞ்ஞானவித்தகனை உயிருடன் பிடித்து, அவரை மதித்து, அவருடைய புதிய வெடிகுண்டு கண்டுபிடிப்புக்களை, ரோம் நாடு பயன்படுத்திக் கொண்டால், உலகிலேயே ரோம் நாட்டுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும் என்று கருதியே, அவன் தனது படைகளுக்கு அந்த நிபந்தனையைக் கடுமை யாக விதித்து அனுப்பி வைத்தான்!

மார்சேல்ஸ் படைகள், சைரக்யூஸ் நகரை முற்றுகையிடுவதற்கு முன்பு, இரவோடு இரவாக, ஆர்க்கிமிடீஸ் விரோதிகள் யார் யார் என்பதைக் கண்டு பிடித்தான்!

அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டான், ஆர்க்கிமிடீஸ் பற்றி அவர்கள் தெரிவித்துக் கருத்துக்ககளை எல்லாம் சேகரித்துக் கொண்டான்.

ஏன் தெரியுமா? போர் நேரத்தில் அவரது பகைவர்களே அவரைக் கொன்றுவிட்டால் நட்டம், ரோமுக்குத் தானே என்பதை உணர்ந்தே அவன் அவ்வாறு திட்டமிட்டான்.