பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

53




சைரக்யூஸ், ஆர்க்கிமிடீஸ் பிறந்த நகரம்-வளர்ந்த நகரம்- வாழும் நகரம்- நாளை, இறக்கப்போகும் நகரம்!

இந்த மண்ணிலே பிறந்த ஒருவன் விஞ்ஞானியாய் விளங்கி, அறிவியலால் அவனியை வாழவைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவன் சாகாமல் உயிரோடிருக்கும்போதே, அவன் கண் எதிரிலேயே, எதிரிப்படைகள் அந்த ஊரிலே புகுந்து, அந்த மண்ணை அடிமையாக்கிட அமர் தொடுத்தால், எந்த மனிதன் தான் அந்த படைகளை மாலையிட்டுப் பாராட்டி வரவேற்பான்?

எனவே, தான் பிறந்த மண்ணை எதிரியிடமிருந்து காப்பாற்றுவது தனது கடமை-உரிமை என்ற ஒரே ஆசையால்தான், ஒரு விஞ்ஞானி தன்னையும், தனது படைகளையும் புறமுதுகிட்டோடுமாறு விரட்டினாரே ஒழிய, கிரேக்க மன்னன் மீதுள்ள பக்தியாலோ, பற்றாலோ அல்ல என்பதையும், அந்த தளபதி மார்ஷேல்ஸ் தெளிவாக உணர்ந்தான்.

ஆர்க்கிமிடீஸ் தான் உயிரோடிருக்கும்போது, அதுவும் தான் கண்டுபிடித்த போர்க் கருவிகள் கைவசமிருக்கும் போது, பிறந்த மண்ணைக் காப்பாற்ற நினைப்பது தவறல்ல. அது அவரது பிறப்புரிமை என்பதை அந்த தளபதி புரிந்து கொண்டான்.

அதனால்தான், அவனுக்கு ஆர்க்கிமிடீஸ் மீது எவ்விதக் கோபதாபமோ, குரோத விரோதமோ ஏற்படவில்லை.