பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

55




இவையனைத்தும் உண்மையா என்பதைச் சில ஒற்றர் மூலமாக அந்த வீரன் அறிந்துணர்ந்தான்!

பெரும்பான்மை அறியாமை முன் - சிறுபான்மை அறிவு தோற்றது! அதனால், ஆர்க்கிமிடீஸ் மீது அவனுக்கும் ஒரு வித அருவறுப்பு தோன்றலாயிற்று! கிரேக்க மன்னன் அழைப்பு அனுப்பியதையும், ஆர்க்கிமிடீஸ் சென்றதையும், போர்த் தளவாடங்களை செய்து கொடுத்ததையும், அந்த வீரன் கேள்விப்பட்டான்.

அவனது அருவறுப்பு மேலும் கொஞ்சம் வளர்ந்து பேருருவம் எடுத்தது! இந்த கட்டத்தில், மறுநாள் ரோமப் படைகள் திடீரென்று சைரக்யூஸ் நகரத்தை தாக்கின! முற்றுகையிட்டன!

ஆர்க்கிமிடீஸ் இவற்றின் மீதெல்லாம் அக்கறை செலுத்தவில்லை. அவர் அறிவியல் ஆராய்ச்சியிலேயே தனது ஆழ்ந்த, உணர்வை ஊடுருவச் செய்தபடியே இருந்தமையால், எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவகாசமுமில்லை-அவசியமுமில்லை.

இதற்குக் காரணம், எதிர்பாராமல் ஒரு படை நகரைத் தாக்கும் என்று அவர் எண்ணவில்லை. அதற்கான அரசியல் சமுதாய- பொருளாதார சூழ்நிலையும் அப்போது அரும்பவில்லை.

சைரக்யூஸ் நகரம் தி சுவாலைகளுக்கிடையே சிக்தித் தத்தளித்தது. மக்கள் எல்லாம் அல்லோல கல்லோலமாகத் திசைக்குத் திசை ஒடலானார்கள். அவரவர் மனைவி மக்களையும் - உடைமைகளையும் காப்பாற்றுவதிலேயே ஓடியலைந்தனர்.