பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


போர் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. எந்தப் போர் வீரனிடம் ஆர்க்கிமிடீசின் பகைவர்கள் அவரைப் பற்றிப் பொய்யையும்-புனைந்துரையையும் கூறி நம்ப வைத்தார்களோ, அந்தப் போர் வீரன், சில கலாட் படைகளுடன் ஆர்க்கிமிடீஸ் சோதனைக் கூடத்தை நோக்கி வந்தான்.

ஆர்க்கிமிடீஸ் தனது போர்க்கள இயந்திரங்களை மீண்டும் தயார்படுத்தி இயக்குகின்ற நிலையிலே இல்லாமல், மிகச் சிறந்த ஒர் ஆராய்ச்சியிலே அப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

உடனே அந்த போர் வீரன் தனது கை வாளால் ஓங்கி அவரது கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் துள்ளத் துள்ள வேடிக்கைப் பார்த்தான்!

பதைபதைக்கத் துடித்து தொப்பென்று தரையிலே வீழந்தார் ஆர்க்கிமிடீஸ்!

அத்துடன் விடவில்லை அந்த வாள் வீரன்! ஆர்க்கிமிடீசினுடைய விஞ்ஞானச் சாதனைகள் ஏதும், உலகுக்குப் பயன்படக்கூடாது என்று அவரது சோதனைக் கூடத்திற்கு நெருப்பிட்டான்.

விஞ்ஞானியின் வீடு எரிகிறது, தீயில் எரிந்து. எரிந்து கருகியது. இராசாயன திரவங்களுக்கு கொஞ்சம் தீ கிடைத்தால் போதாதா?

தீ நாக்குகள், நீண்ட நெடும் உயரமாக ஓங்கிச் சுடர் விட்டு எரிக்கின்றன.

அவரது அறிவியல் இராசயனத் திரவங்கள் எல்லாம், ஆர்க்கிமிடிசினுடைய பயங்கரப் படுகொலையைக் கண்டு, மிக பயங்கரக் கோபம்