பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

57


அடைந்ததைப் போல வானுற ஓங்கி.. ஓங்கி.. படர்ந்து.. வெடித்து.. வெடித்து.. எரிகின்றன..!

எங்கு பார்த்தாலும் எழும் புகை மண்டலங்கள். ஊரையே சுற்றி வளைத்துக் கொண்டன !

அறிவின் துரோகிகள் எல்லாம் எங்கும் போக முடியாதபடி திராவக நெடிக்குள்ளும்- புகைக் குள்ளும் சிக்கிச் சிதறிக் கொண்டிருந்தனர்!

மூச்சுத் திணறி விழுந்தவர்கள், உயிரோடு எரிந்தவர்கள், உடைமை இழந்து அழுதவர்கள் மனைவி மக்களைப் பறி கொடுத்தவர்கள் ஆர்க்கிமிடீசுக்குத் துரோகம் புரிந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை இது.

நகரிலே மூண்ட தீ நல்லவன் கெட்டவன் என்று எவனையும் பார்க்கவில்லை; எல்லாரையும் திக்கு முக்காடச் செய்து, ஒ- வென்ற பேரிரைச்சலோடு எரித்துக் கொண்ட இருந்தது.

எரிகின்ற விஞ்ஞானியின் வீடு, அறிவின் பகைவர்களே ஒடுங்கள் என்று ஓங்காரக் குரல் கொடுப்பதைப்போல, வெடித்து வெடித்து ஒலமிட்டன பேரிரைச்சலோடு!

ஒரு விஞ்ஞான மேதையை மதிக்காத நகர மக்களின் காலடிகள், மீண்டும் சைரக்யூஸ் நகரத்திலே படக்கூடாது என்பதைப் போல - ஒவ்வொரு வீதியிலும் கனன்ற நெருப்புத் துண்டங்கள் குவித்து கிடந்தன!

ஒருகாசு இலாபமும் இல்லாமல், காலமெல்லாம்