பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

59


இந்த காட்சிகளுக்கிடையே மார்சேல்ஸ் ஓடி வருகிறான் ஆர்க்கமிடீசுக்கு ஏற்பட்ட அவலத்தைக் கேட்டு!

கண்ணிர் சிந்தியபடியே ஆர்க்கமிடீஸ் கல்லறையிலே மண்டியிட்டான் அந்த மாவீரன்!

ரோமனியப் படைகளை எல்லாம் வரிசை வரிசையாக அந்த ஞான சூரியனின் கல்லறையிலே விழுந்து வணங்குமாறு உத்திரவிட்டான்.

அந்த தளபதியின் உத்திரவுக்குக் கீழ்படிந்து ஆர்கிமிடீஸ் கல்லறையின் கால் பகுதியிலே மண்டியிட்டுக் கண்ணிர் விட்ட படையினரிலே ஒருவனாகத் தேம்பித் தேம்பி அழுதான், அவரை வாளால் வெட்டிய கயவன்!

அவன் என்ன செய்வான் பாவம் விஞ்ஞானப் பகைவர்கள் அவனிடம் ஆர்க்கமிடீசைப் பற்றித் தவறாகக் கூறியதினால் ஏற்பட்ட விளைவு அல்லவா அந்த காட்சி!

ஆர்க்கிமிடீஸ் கல்லறையிலே அவருடைய மனதுக்குப் பிடித்த, அவரது அறிவுால் உருவான, அறிவியல் சின்னங்களான கோளம், சிலிண்டர் இரண்டையும் பொறித்தார்கள்.

உலகம் உய்ய, அல்லும் பகலும் அயராது உழைத்து அரிய பல அறிவியல் அற்புதப் படைப்புகளைக் கண்டு பிடித்த விஞ்ஞான மேதை ஆர்க்கிமிடீஸ் அறிவியலின் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டு, செந்நீரைச் சிந்திக் கல்லறையாகி விட்டார்!