பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


கலையின் விந்தைகளால் விளைந்த வியக்கத் தக்கச் சாதனைகளாகும்:

இயற்கையின் சக்திகளைத் தனது இரிய சிந்தனைக் கூடத்திலே நிறுத்தி, அவற்றை அக்குவேறு ஆணி வேறாக ஆய்வு புரிந்த மனிதன், இன்றும் தனது அறிவால் அவற்றை வெல்வதற்காக உழைத்து வரு கின்றான்.

இந்தப் போராட்டங்கள் எல்லாம். சிந்தனைப் பயனங்கள் எல்லாம். மனித இனத்தின் உயர்வுக்கும். வாழ்வுக்கும் மறுமலர்ச்சிக்கும் நடந்த, அறிவுப் போராட்டங்களாகவே திகழ்ந்து வருகின்றன.

இத்தகைய வாழ்க்கைச் சூழல்களிலே அமைந் துள்ள மக்கட் சமுதாயத்தை ஆராய்ச்சி எனும் அளவு கோல் கொண்டு அளந்தவர்கள் எண்ணற்றோர் ஆவர்.

மனித இனத்துக்கு இனிது பயன்படுகின்ற அந்த சிந்தனைச் சிதறல்களால், மேதினியிலே உள்ள பெர்ருள்கள் யாவும் மதிப்பும் - மாண்பும் பெற்று மேன்மை பெறுகின்றன.

அந்த படைப்புப் பொருட்களைக் கொண்டு மனிதன் வியத்தகும் விளைவுகளை விளைவித்து, புதிய கண்டு பிடிப்புக்களைக் கண்டு பூமிக்குக் கொடையாகக் கொடுத்து வருகின்றான்.

அறிவும் ஆற்றலும், நெறியும் நீர்மையும், மனித இனத்திலே ப்ெருகியிருப்பதினாலேதான்், ஆராய்ச் சிக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞானியாக மனிதன் விளங்கி மக்கட் சமுதாயத்தை வாழ