பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


மூன்றை மூன்றால் பெருக்கியும், நான்கை நான்கால் பெருக்கியும் கூட்டினால், அந்த மொத்த எண், ஐந்தை ஐந்தால் பெருக்கி வரும் தொகைக்குச் சமம் என்று, மேற்கண்ட கணிதக் குறிப்புக் காட்டுவதைக் காணலாம்.

இந்த கணிதச் சூத்திரம், எல்லா வகைச் செங்கோண முக்கோணங்களுக்கும் பொருந்துமாறு உள்ளது.

இந்த கணக்கு விளக்கம், கணித விற்பன்னர்களின் கவனத்திற்கு. ஒரு சுவையான உணர்வையும் ஊக்கத்தையும் அளித்ததால், உலகிலே உள்ள மற்ற கணித மேதைகள் அந்தந்த காலகட்ட கணித வளர்ச்சிக்கு ஏற்ப நூறு நிருபணங்களைப் புதிது புதிதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

மாமேதை பித்தாகரஸ் உருவாக்கிய விதிகள் உண்மையானவை என்பதை மெய்ப்பிக்க, அந்த நூறு நிருபனங்கள் இன்றும் பயன்பட்டு நிரூபித்து வருகின்றன.

கிரேக்க நாட்டைச் சேர்ந்தவரான பித்தாகரஸ், எகிப்து நாட்டு மக்களின் கணிதக் கலையை ஆராய்ச்சி செய்தது, கிரேக்க மன்னனாக அப்போது அரசு நடத்திய பலிக்கிரட்டீஸ் என்பவனுக்குப் பிடிக்கவில்லை.

கணிதத் துறையிலே அவர் எவ்வளவு புலமையாளராகப் புலப்பட்டாரோ, அவ்வளவு அற்புத சிந்தனையாளராக அறிவியலிலும் விளங்கினார்.