பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

67


வானநூல் வல்லான் வகுத்துக் கூறிய விதிகள், கணித விற்பன்னன் கண்டு பிடித்த சூத்திரங்கள், அனைத்தையும் கேட்ட அந்த அரசவை, இயற்கையை எதிர்த்து வழக்காடும் ஒரு துரோகி என்று அவரை முடிவு கட்டிவிட்டது.

பித்தாகரஸ், அதனால் நாடு கடத்தப் பட்டார்! தனது 58ஆம் வயதில் தாய்நாட்டுத் துரோகி என்ற பட்டம் சூட்டப்பட்டு துரத்தப்பட்டார் - கிரேக்க வேந்தனால்!

மன்னனது தீர்ப்பை கண்டு அவர் மனம் தளரவில்லை. அஞ்சா நெஞ்சத்துடன், "நான் கூறியது முற்றிலும் உண்மையே" என்று மக்கள் மன்றம் முன்பு வாதாடினார்.

கிரீஸ் நாட்டிலே இருந்து தென் இத்தாலி நாட்டிற்குத் துரத்தப்பட்ட அவர், அங்கு வந்த பின்பும் வாளாவிருக்க வில்லை.

"உண்மையை உரைக்கிறேன். மன்னனுக்காக அல்ல. மக்களுக்காக, இந்த மாபெரும் உலகத்துக்காக எனது அறிவுக்குப் புலப்பட்ட உண்மையைக் கூறுவது குற்றமென்றால், அதற்காக என் உயிரையும் இழக்கத் தயார்" என்று, தென் இத்தாலி நாடுகளிலேயும் முழக்கமிட்டார்- பித்தாகரஸ்!.

பித்தாகரஸ் கூறுவது உண்மைதான் என்று நம்பும் அறிஞர்கள் எங்கெங்கு உள்ளனரோ, அவர்களை எல்லாம் மெத்தச் சிரமப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்தார்!

நாடோடியாய் அலைந்தார்! கிராமம் கிராமமாய்ச் சுற்றினார்! நகர நகரமாய் நடந்தார்! நாடு நாடாய்ச்