பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


சுற்றினார்! எங்கெங்கு அவர் சென்றாரோ அங்கங்கெல்லாம் அறிவுத் தீயைக் கொளுத்தினார்!

பித்துப் பிடித்தவனைப் போல அலைந்தார்! பைத்தியக்காரனைப் போல அவர் அலைவதைக் கண்ட அவரது மாணவர்கள், அவரை வரவேற்றார்கள்! பாராட்டி மகிழ்ந்தார்கள்!

ஒவ்வொரு ஊர்களிலேயுமுள்ள தனது நண்பர்களைத் திரட்டி, ஆங்காங்கே சமையச் சார்புள்ள பொதுப்பணி மன்றங்களை உருவாக்கினார்.

அந்த மன்றங்களிலே உறுப்பினரானவர்கள், கணிதத்தைப் போலவே தத்துவ ஞானத்திலும், சமையத்திலும், விருப்பம் கொண்டவர்களாக விளங்கினார்கள்.

எந்த கிரீஸ் நாட்டு மன்னன், மாமேதை பித்தாகரசை நாத்திகன் என்றும், இயற்கையின் துரோகி என்றும் கூறி நாடு கடத்தினானோ, அவன் வெட்கப்படுமளவுக்குச் சமையத் தத்துவங்களை அழகாக மக்களுக்குக் கூறிப் புகழ் பெற்று வந்தார்! இதோ அவர் பேசுகிறார் கேளுங்கள்!

"மூன்றை மூன்றால் பெருக்கினால் ஒன்பது வரும் என்பதற்கோ, நான்கையும் நான்கையும் கூட்டினால் எட்டு என்ற எண் வரும் என்பதற்கோ தத்துவ ஞானம் தேவையில்லை"

"திருடாதே, பொய் கூறாதே, கொலை செய்யாதே, பஞ்சமா பாதங்களைச் செய்யாதே, என்று மக்களுக்குக் கூற, நாட்டில் நீதி நூல்கள் உள்ளன"

“அதனைப்போலவே அறிவியல் மதிப்பீடுகளும் மாற்ற முடியாதவைகளாகும்".