பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


எழுப்பும் வினாக்களுக்கு, மனமே தரும் விடைகளை, விவகார அறிவை, காரணத்தை, விவாத முடிவைத் தான் நம்புவான் - ஏற்றுக் கொள்வான்"

"மூன்றை மூன்றால் பெருக்கினால் ஒன்பது வரும், என்ற நிலையான முடிவுகள் உடைய பெருக்கல் கணக்கைத் தத்துவ ஞானி போட மாட்டான்"

"ஒரு துளி கண்ணிரைச் சோதிக்கிற விஞ்ஞானி என்ன சொல்வான்? அந்த துளியளவு கண்ணிரில், உப்பு இவ்வளவு, நீர் இவ்வளவு அழுக்கு இவ்வளவு, என்று கணக்குக் காட்டுவான்"

"கண்ணிர் ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்பதற்கும் விடை காண்பான் உடற்கூற்று சாஸ்திரி"

"கண்ணிர் வருவது நன்மையா? தீமையா? என்று ஆய்வு புரிவான் மருத்துவ ஞானி. கண்ணிர் எப்போதெல்லாம் வரும் என்பதற்கு விளக்கம் உரைப்பான் மனோ தத்துவ ஞானி'

"ஆனால், தத்துவ ஞானி ஒருவனால்தான், கண்ணிர் ஏன் வருகிறது? என்று கேட்டு, அதற்குரிய தடை - விடைகளை வரையறுத்துக் கூறுவான்"

"அதனால்தான், விளைவுகளை ஆராயும் - விஞ்ஞானத்தின் முன், தத்துவம் மங்கி இருந்தாலும்கூட, காரணத்தை ஆராயும் தத்துவ ஞானத்தின் இடத்தை இன்னும் விஞ்ஞானத்தால் எட்டிப் பிடிக்க முடியவில்லை"