உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

71


"கண்களால் காண முடியாதவற்றை விஞ்ஞானம் நம்புவதில்லை. கண்களால் பார்க்க முடியும் என்பனவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் - தேடுதலும்தான் விஞ்ஞானத்தின் அடிப்படை".

"தத்துவம் - கண்களால் காணமுடியாத, வாழ்க்கையின் மதிப்பீடுகளை, முகரும்படி எடைபோடும் தராசு, அளக்கும் அளவுகோல்".

"தீமையை எதிர்க்கவும், இழப்பைத் தாங்கிக் கொள்ளவும், தோல்வியை வெற்றியாக மாற்றவும், சாவையும் கண்டு எள்ளி நகையாடிடும் துணிவு பெறும் வழிகளைச் சொல், என்று விஞ்ஞானத்திடம் கேட்டால், அவற்றை -அது சொல்லாது- கொடுக்காது. காரணம், அவற்றால் கொடுக்க முடியாது. தத்துவம் மட்டும்தான் அவற்றைத் தாராளமாக வழங்கும்".

கிரீஸ் நாட்டு மன்னன் பாலிக்கிரட்டிஸ், பித்தாகரசை நாடு கடத்தியதற்குப் பிறகு, தான் நாடோடியாய் அலைந்த ஊர்களில் எல்லாம் பொதுப்பணி மன்றங்களை நிறுவி, மேற்கண்டவாறு தத்துவம் பிறந்த கதையை அவர் ஒவ்வொரு இடத்திலும் முழக்கமிட்டார்.

அவர் நிறுவிய மன்றங்கள் எல்லாம் சமையச் சார்புள்ள மன்றங்களாதலால், அங்கங்கே தத்துவங்கள் பிறந்ததைக் கதை கதைகளாகக் கூறி மக்களிடையே தத்துவ ஞானத்தைப் பரப்பினார்.

பித்தாகரஸ் சிறு வயது முதற்கொண்டே எண்களுக்கும், இயற்கைக்கும், ஆத்மாவிற்கும் ஏதோ ஓர் தொடர்பிருக்கிறது என்று சிந்தித்தார்.