பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


மாற்ற முடியாதது எது? மாற்றக் கூடியது எது? மாற்றலை ஏற்படுத்துவது எது? மாறுதலுக்குள்ளாவது எது?

இத்தகைய இரண்டு கட்டத் தன்மைகள் உலகில் நிலவுவது ஏன்? என்ற கேள்விக்கு அவர் விடை கண்டுபிடித்தார்.

உலகம் என்பது ஒரிடத்தில் நிலையாக நின்று கொண்டிருக்கின்ற பொருளல்ல. சூரியன், சந்திரனைப் போல, பூமியும் ஒரு கிரகம்தான் என்று முதன்முதலில் உலகுக்கு உண்மையை எடுத்து உரைத்தவர் பித்தாகரஸ்தான்.

"உலகம் என்பதும், வாழ்க்கை என்பதும் ஒருமைப்பாடு உடையதல்ல. எல்லாம் இரண்டுபட்ட தன்மையுடையவைதான்"

எந்த பொருளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பகுத்து, பிளவுப்படுத்தி, வேறுபாடுகள் கொண்டு பார்த்தாக வேண்டும் என்ற தெளிவான முடிவுக்கு வந்தான் பித்தாகரஸ்"

அதற்குக் கணிதம் அவனுக்குத் துணை புரிந்தது.

"ஒன்றும்,ஒன்றும் இரண்டு என்றும், இரண்டும், இரண்டும் நான்கு என்றும் எளிதாகக் கூறி விடுகிறோம். இதற்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? பித்தாகரஸ் இதனைத் திட்டவட்டமாகவே விளக்கினார்.

"மூன்று கோணங்களை ஒன்று சேர்ப்பதால் வருகின்ற மொத்தம், எந்த இரண்டு நேர் கோணங்களுக்கும் சமமாகத்தான் இருக்கும்" என்ற