பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

73


சித்தாந்தத்தைப் பித்தாகரஸ் வகுத்தார்.

"வாழ்க்கையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மைகள் நீடித்துக் கொண்டே வந்தால், அமைதி என்பது கிட்டாது"

"ஆன்மா என்பது வேறு, உடல் என்பது வேறு மனித வாழ்க்கை என்பது கணக்கு வடிவத்தில் இயங்குகின்ற ஒரு பொருளின் தோற்றம். இந்த வகையில் உலகம் முழுவதும் ஒன்றுதான்" என்றார் பித்தாகரஸ்.

"கணிதத்தில் ஒன்று என்கிற எண்ணுக்குத் தனிச் சிறப்பும்-மதிப்பும் உண்டு"

“ஒன்று என்கிற எண், வேறு எந்த எண்ணோடும் கூட்டியதாலோ - கழித்ததாலோ வந்தது அல்ல".

"அதைப் போலத்தான், ஆன்மா என்பது ஒரு புள்ளி. வேறு ஏதோ ஒன்றினால் ஆன்மாவை உற்பத்தி செய்ய முடியாது”

“ஒன்று என்கிற எண்ணோடு இன்னொரு எண்ணைக் கூட்டினால், இரண்டு மூன்று போன்ற எண்கள் வரும். ஆன்மாவோடு காரணத்தைச் சேர்த்தால் அதுதான் வாழ்க்கை"

“மூன்றிலிருந்து இரண்டைக் கழித்தால் மீதி இருப்பது ஒன்று, காரணம் என்பதை வாழ்க்கையிலிருந்து அகற்றி விட்டால் மீதி இருப்பது ஆன்மா மட்டும்தான்"

உலகத்தைப் பத்துப் பிரிவாகப் பித்தாகரஸ் பகுத்துக் காட்டினார். எண்கள்தான்் பொருளாக, மாறுகின்றன.