பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

11




வைத்துக் கொண்டிருக்கின்றான்.

சூரிய குடும்பத்தின் சூழல் வேகங்களிலே ஊடு ருவுகின்றான்.

கண்ணுக்குப் புலப்படாத இயற்கைச் சக்திகளைத் தனது அறிவுக் கண்களால் துருவி ஆராய்கின்றான்.

நீலவானின் நீளத்தையும்

ஆழ்கடலின் ஆழத்தையும்

மலைகளின் நிலைகளையும்

மண்ணின் மகத்துவங்களையும்

ஆழ்ந்து, கூர்ந்து கண்ட விஞ்ஞானிகள், பல விதி முறைகளை உருவாக்கி உலகுக்கு அளித்துள்ளார்கள்.

அவர்கள், இவ்வாறு அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்துக் கூறிய கருத்துக்களாலேதான், இன்றும் நாம் அந்தச் சாதனைகளின் அரிய உண்மைகளை அனுபவித்து வருகின்றோம்.

அநுபவம் வாய்ந்த அவர்களின் கண்டு பிடிப்புகளுக்கு அடையாளமாக, அவை இன்றும் அவனிக்குப் பற்பல பயன்களைத் தந்து கொண்டிருக்கின்றன.

அறிவையே முதலாக வைத்துப் பலகாலமாக அயராது உழைத்துழைத்துத் தேடித்தந்த, அவர்களது உழைப்புச் செல்வத்தின் அருமையை, மக்களிலே பலர் உணராமலிருந்தது கூட வியப்பில்லை ! அதற்கு மாறாக, அந்த மேதைகளை அலட்சியம் செய்தார்கள்-உதாசினப் படுத்தினார்கள் அவமானப் படுத்தினார்கள்.