பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


"எண்ணிக்கையில் அடங்காத பொருள் உண்டு. பொருளில் அடங்காத பொருள் உண்டு. பொருளில் அடங்காத எண்ணிக்கை இல்லை".

உலகத்தையும் வாழ்க்கையையும், ஒரளவுக்கு உட்பட்டது, அளவுக்கு உட்படாதது என இரண்டாகப் பிரித்துத் தன்னிகரற்ற விளக்கத்தை அவர் தரணிக்குத் தந்தார். 1. புள்ளி, எல்லாவற்றிற்கும் துவக்கம் அதுதான். 2. இது வரிசைக்கோடு என்பனவற்றிற்குச் சமம். 3. இது பரப்பைக் குறிக்கும். 4. இது திண்மையைக் குறிக்கும்.

மேடு, பள்ளம் = சரிசமம், இடம்=வலம், ஆண்-பெண், ஒன்று=பல, ஒய்வு=ஊட்டம், நேர்=வளைவு, காரணம்=ஆன்மா, இருள்=ஒளி, நன்மை=தீமை, சதுரம்=வட்டம் என்ற இந்தப் பத்து சூத்திரத்துக்குள்ளே மனித சமுதாயம் அடங்கி விட்டதாகப் பித்தாகரஸ் கூறுகிறார்.

எப்படி எண்களுக்கெல்லாம் அடிப்படையாக 1 இருக்கிறதோ, அதைப்போல், வாழ்க்கைக்கு அடிப்படையாக ஆன்மா இருக்கிறது.

எனவே, ஆன்மாவைப் புரிந்து கொள்வதுதான் வாழ்க்கை. அது மாறுதலற்றது, என்று கணிதமேதை பித்தாகரஸ் மனித வாழ்க்கையினையே தத்துவம் பிறந்த கதையாகக் கூறி மக்களை எழுச்சி பெற வைத்தார்.

எந்த கிரீஸ் நாட்டு மன்னன் பித்தாகரசை இயற்கையின் துரோகி என்று கூறி நாட்டை விட்டுத்