பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

75




துரத்தினானோ, அதே மன்னன் பித்தாகரசின் தத்துவ விளக்கங்களைப் பலர் மூலம் கேள்விப்பட்டு வெட்கம் அடையுமளவுக்கு, பித்தாகரஸ் தனது வாரிசுகளுக்கு புலமையைப் புகுத்தினார்.

உலகம் என்பது ஒரிடத்தில் நிலையாக நின்று கொண்டிருக்கும் பொருளல்ல. சூரியன்-சந்திரனைப் போல,பூமியும் ஒரு கோள்தான் என்ற கோளியத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு முதன் முதலில் கூறியவர் பித்தாகரஸ்தான் என்று கூறினோம்.

சூரியன்தான் உலகின் நடுநிலை என்ற கருத்தை அரிஸ்டார்க்கஸ் ஆராய்வதற்கு அடிப்படை விதிகளை வகுத்துத் தந்தவர் பித்தாகரஸ்தான் என்றால் மிகையல்ல.

அறிவியல் மேதை பித்தாகரசுக்குப் பிறகு, ஏறக்குறைய இருநூறாண்டுகள் பின்னாலே பிறந்தவரும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞான வித்தகராம் ஆர்க்கிமிடீஸ் என்பவருக்கு ஆசானாக விளங்கியவரும், தலை சிறந்த நிபுணருமான சீனான் என்பவர், பித்தாகரஸ் பிறந்த ஊரிலே பிறந்தவர்தான்.

அந்த மாமேதை சீனான், பித்தாகரஸ் சூத்திரங்களை எண்ணெண்ணி எழுத்தெண்ணிக் கற்றதனால் தான், உலகத்தின் நடுநிலை சூரியனே என்ற பித்தாகரஸ் கருத்துக்கும் அவரது மன்றத்தினரின் ஆய்வுக்கும் மதிப்பளித்து ஆதரவு தந்தார்.

பித்தாகரஸ் கண்டுபிடித்துக் கூறிய அதே வானியல் விஞ்ஞானக் கருத்தையே, அவருக்குப் பிறகு 1540 ஆண்டுகள் கழித்துத் தோன்றிய நின்னலேயஸ்