பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

79


"மனிதன் துய வாழ்வு வாழ வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பகுத்துப் பார்த்து வாழ வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலமாய் வாழ்வது கூடாது" என்கிறார்.

வேலை செய்து வாழ்வதைக் கண்டாலே பிடிக்காத அக்கால மக்களிடையே இந்த சமயோபதேசமும் நீதிநெறிகளும், அவருக்கு மேலும் எதிர்ப்பை உருவாக்கி விட்டன.

பித்தாகரஸ் போதித்த ஒழுக்க முறைகள், தற்கட்டுப்பாடுகள் துய்மை வாழ்வு, மதுவைக் குடிப்பதிலும் உணவை உண்பதிலும் மட்டும் விடாதநிலை, ஆணைக்கு அடங்கி நடத்தல், வானியல் ஆராய்ச்சிகள், கணிதவியல், கண்டு பிடிப்புகள், சங்கீத ஆய்வுகள் அத்தனையும், அந்தந்த துறையிலே அவருக்கு எதிர்ப்புக்களையும்! அலட்சியங்களையும் தோற்றுவித்தன.

இவ்வாறு, பகைகள், குரோதங்கள், விரோதங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. உருவெடுத்தன.

எந்தெந்த ஊர்களில் எங்கெங்கு சென்று அறிவு மழையைப் பொழிந்தாரோ, அந்தந்த இடங்களிலே எல்லாம் அவர் மீது கற்களும், தடிகளும் மற்ற கண்டதுகளும் மழையாகப் பொழிந்தன.

ஓடினார்,மற்றோர் இடத்திற்கு! மீண்டும் ஓடினார் வேறோர் இடத்திற்கு! மீண்டும் மீண்டும் ஓடினார்- அடுத்தவோர் இடத்திற்கு!

தனது வாழ்நாளெல்லாம் இவ்வாறு ஒடிக் கொண்டே இருந்தார்! தள்ளாத வயதில் தளர்ந்த