பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


4.பைத்தியக்காரனாக
மாறிய விஞ்ஞானி

ங்கிலாந்து நாட்டிலே உள்ள ஒர் நகரம் போக்ஸ்ட்டன். அந்த ஊர்14.1578-ஆம் நாள் அன்று ஒரே கோலாகலமாகக் காட்சியளித்தது.

மூட நம்பிக்கைகளை முறியடிக்கப் போகும் ஒரு டாக்டர் பிறந்து விட்டார் என்பதற்காக அல்ல-அந்த கோலாகல மாட்சி.

அறியாமையால் இருண்டு கிடக்கும் அவனிக்கு, உடலியல் துறையில் ஒளியேற்றி வைக்கப் போகும் மாமேதை டாக்டர் வில்லியம் ஆர்.வி பிறந்து விட்டார் என்பதற்கல்ல,அந்த விழாக் கோலம்.

ஏப்ரல் ஃபூல் என்று மேதினியால் கொண்டாடப் படும் அனைத்து முட்டாள்களுக்காகவும் கொண்டாடப்படும் விழாவே அது.

அதனால், இங்கிலாந்து நாடே மாபெரும் விழாக் கோலத்தை, எங்கு பார்த்தாலும் கொண்டாடிக் கொண்டிருந்தது! அதே விழாதான் போக்ஸ்ட்டன் நகரிலும் நடந்தது.

டாக்டர் வில்லியம் ஆர்வி, மடையர்கள் தினமான அன்றுதான் பிறந்தார். அவர் தந்தை செல்வச் சீமான். போக்ஸ்ட்டன் நகரச் செல்வச் சீமான்களிலே குறிப்பிடத்தக்க ஒருவர். அந்த நகர மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர்! பிறகு, மேயராகவும் பதவி வகித்தவர்! அவர் பெயர் தாமஸ் ஆர்வி என்பதாகும்.