பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு



உழைப்பது, உண்பது, உறங்குவது, விழித் தெழுவது, இனிமை தரும் சுக போகங்களை அனுபவிப்பதுமாக இருந்த ஒரு சில மனிதர்கள், ஒளி மிகுந்த மணியிலும் அளி மிகுந்த பண்புடைய அவ் விஞ்ஞான வித்தகர்களையும், அவர்களது அரிய சாதனைகளையும், அந்தந்த கால கட்டங்களிலே எதிர்ப்புக் குரல்களைக் கொடுத்து எதிர்த்தே வந்தனர். முயற்சிகளையும் சீர்குலைத்தே வந்தனர்.

மனம் போனவாறு மக்கட் கூட்டங்களைக் கூட்டி, வதந்திகளைப் பரப்பி, வசை மாரிகளைப் பொழிந்த மக்கள். அக்காலத்திலே ஏராளமாக இருந்து வந்தனர்.

உலகத்தை வாழ்விக்கும் உயர்ந்த பண்புகளைக் கொண்ட அந்த விஞ்ஞான உத்தமர்களின் நீர்மைகள், மனித சமுதாயத்தின் உயர் மணங்களாய் ஒளி வழங்கு வதை, அந்த அறிவியலின் விரோதிகள் தங்களது எதிர்ப்புக் கணைகளாலே வீழ்த்தி, மன வேதனை களைத் தந்திடும் அறியாமை இருள்களாக நடமாடினார்கள்.

உருவத் தோற்றத்திலே அந்த அறிவியல் துரோகிகள் மனிதர்களாக உலவினார்களே தவிர, உள்ளத்திலே உண்மைக்கும் உயர்வுக்கும் - உழைப் புக்கும் இடந்தரும் சாதாரண மக்களின் சராசரி இதயத்தைக் கூடப் பெற்றவர்களாக அவர்கள் இருக்கவில்லை.

இழிந்த மாய மயக்கங்களாலான அறியாமை அகங்காரம், ஆணவம்- மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவை, அவர்களை வளைத்து கொண்டு ஒயாமல் அரித்து வந்தன!