பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

85


மருத்துவத் துறையில் இத்தகைய முரட்டு நம்பிக்கை, ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி விட்டதைக் கண்ட ஆண்ட்ரியஸ் வெசேலியஸ் என்ற மாமேதை, அதை ஆட்டி அசைத்து உலுக்கிக் காட்டினார்.

அவருக்குப் பிறகு மருத்துவத் துறையில் சிறந்த சிந்தனையாளராக வளர்ந்து வந்த வில்லியம் ஆர்வி, கேலனுடைய கண்டுபிடிப்புகளிலே உள்ள தவறுகளை முழுக்க, முழுக்க எதிர்த்து, அசைத்து, அடியோடு சாய்த்தார் என்றே கூறலாம்.

பாடுவா நகரில் அவர் படித்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சிக் காலத்திலே, கேலன் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்தாக எதையும் கூறிட, ஆர்வி முன் வரவில்லை.

டாக்டராக, அவர் பட்டம் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலே உள்ள மருத்துவ-இயல் ஆய்வுச் சங்க உறுப்பினரானார்.

செயிண்ட் பார்த்தாலம் யூ என்ற மருத்துவ நிலையத்திலே அவர் டாக்டராக பணியாற்றினார்.

அந்த சமயங்களிலே அவர் பல ஆய்வுச் சங்கங்களிலே சென்று உரை நிகழ்த்தும் வாய்ப்பை அடுத்தடுத்துப் பெற்றார்.

கேலன் செய்த ஆராய்ச்சிகளிலே உள்ள தவறுகளை அவரது சொற்பொழிவுகளின் இடை யிடையே சுட்டிக் காட்டியவாறே இருந்தார்.

'கேலனைப் போய் குறை கூற, யார் இந்த ஆர்வி? என்ன தகுதி இவருக்கு? எப்படிப் பெற்றார் இந்த