பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


நெஞ்சுரத்தை?அகம்பாவமா? அல்லது ஆராய்ச்சியிலே விளைந்த உண்மைதானா?என்று மருத்துவத் துறையிலே உள்ள அனைவராலும் கவனிக்கப்படும் ஒரு முக்கியப் புள்ளியாக அவர் வளர்ந்து கொண்டே வந்தார்.

இங்கிலாந்து நாட்டு மன்னராக இருந்த சார்லஸ் மன்னருக்கும் - ஆர்விக்கும் நெருக்கமான நட்புரிமை ஏற்பட்டது.

ஆர்வி, அப்போது அரசவை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். ஆலிவர் கிராம் வெல்லோடும் நாடாளுமன்றத்தோடும் சார்லஸ் மன்னர் நடத்தி வந்த போர்களினால் மக்களில் பலர் மன்னன் மீது வெறுப்பும் விரோதமும் கொண்டிருந்தனர்.

அந்த பகை நோக்கு ஆர்வி மீதும் படர்ந்ததிலே வியப்பில்லை அல்லவா.

ஆனால், அவர் மிக எச்சரிக்கையுடனேயே மன்னனிடம் பழகி ஆலோசனைகளைக் கூறி வந்தார்.

கி.பி.1649-ஆம் ஆண்டில் டாக்டர் ஆர்விக்கு வயது எழுபத்தொன்றாயிற்று. அந்த வருடத்திலே ஒருநாள் சார்லஸ் மன்னன் தலை கோடாரிக்குப் பலியானது.

அந்த நேரத்தில் ஆர்.வி.க்கும் - மன்னருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறத் தக்கவாறு அவர் நடந்து கொண்டார்.

டாக்டர் வில்லியம் ஆர்வி மனித இதயத்தைப் பற்றி முதன் முதலாக ஆராய்ச்சி செய்தபோது, தனது புதிய கண்டுபிடிப்புகள் சிலவற்றை உலகின் முன்பு வைத்தார்.