பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

89



மருத்துவம் புரிவதிலே மிகத் திறமையோடு நோயாளிகளை அணுகினார். அதனால், அவருக்குப் பெரும் புகழ் ஏற்பட்டது.

இதனைக் கண்ட மற்ற அழுக்காறுப் பிறவிகள், நோயாளிகளை அவரிடம் வரவிடாமல் அச்சுறுத்தித் தடை செய்து விட்டனர்.

'ஆர்வியிடம் சென்றால் இதயத்தை அறுத்து விடுவான். ஜாக்கிரதை' என்ற வதந்திகளை நகரமெங்கும் பரப்பி விட்டனர் - அவரது அறிவின் விரோதிகள்!

வில்லியம் ஆர்வி, அதற்கு விளக்கம் கூறும்போது ஒவ்வொரு இதயத் துடிப்புக்கும் தமனிகள் விரிவடைந்து நாடித் துடிப்பை ஏற்படச் செய்யும்.

தமனிகள் எல்லாம் குருதியை இதயத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லுவதை, அதன் மூலமாக நிரூபித்து காட்டினார்.

மனிதனுக்கு ஒவ்வொரு முறையும் நெஞ்சு அடிக்கும் போது, அது இரண்டு அவுன்ஸ் ரத்தத்தை வெளியேற்றுகிறது. ஒரு நிமிடத்துக்கு எழுபத்திரண்டு முறை அவ்வாறு அது அடிக்கிறது, என்று குருதியின் அளவையும் கணக்கிட்டார்.

இதயம், ஒரு நிமிடத்தில் ஒரு காலன் இரத்தத்தை வெளியேற்றுகிறது! ஆனால், இதயம் ஒரு நாளைக்கு வெளியேற்றும் இரத்தம் 1500 காலனுக்கும் அதிகமாக இருக்கிறதே - எப்படி? என்ற கேள்விக்கும் விடை கண்டார்.