பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு



"இரத்தம், ஒரு சுற்றாக உடலைச் சுற்றி வந்தால்தான் இவ்வளவு அளவு இரத்தம் உண்டாகும்" என்றார்.

அது எப்படி என்றால் - இரத்தம் இதயத்திலிருந்து புறப்பட்டு உடல் முழுவதும் சுற்றி ஓடி வரும்படி பம்ப் செய்யப்பட்டு, மீண்டும் இதயத்துக்கும் அது திரும்பி வந்து சேர்ந்தால்தான் இவ்வாறு நிகழும்.

இதனால், இரத்தம் உடலைச் சுற்றி ஓடி வருகிறது என்பதையும் ஆய்வால் அறிந்தார்.

மனித உடலை இவ்வளவு ஆழமாக ஆழ்ந்து ஆய்ந்துணர்ந்த மேதையை, அன்றைய உலகம் அரைப் பைத்தியம் என்று கேலி செய்து கைக்கொட்டிச் சிரித்தது.

மனித உடலைப் பற்றிய இந்த இரகசியம், ஒரு நாள் மருத்துவத் துறைக்கு நிச்சயமாக பயன்பட்டே தீரும் என்று கண்ணிர் விட்டாரே தவிர, சிந்தனையின் போக்கை எந்த எதிர்ப்புக்காகவும் அவர் மாற்றிக் கொள்ளாத சிந்தனை வீரனாகவே திகழ்ந்தார்.

மனித உடலிலே உள்ள சிரைகளும் தமனிகளும் ஒரு வழிப் பாதைகளே என்பதைக் கண்டு பிடித்துக் கூறினார்.

இந்தப் பாதைகளில் அங்கங்கே இதழ்கள் போன்ற சில பகுதிகள் தொங்கியபடியே இருந்து, ஒரு வழிக் கதவுகளைப் போன்ற வால்வுகளாகச் செயல் புரிகின்றன என்பதை உணர்ந்தே குறிப்பிட்டார்.

தமனிகளில் அமைந்திருந்த வால்வுகள், இரத்தம் இதயத்திலிருப்பது வெளியேறிச் செல்ல மட்டுமே வழி விடுகின்றன.