பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

91


 சிரைகளில் உள்ள வால்வுகள், இரத்தம்-இதயத்தை நோக்கிச் செல்ல மட்டுமே வழி விடுகின்றன, என்ற விவரத்தைத் தமக்குக் கிடைத்த சில பிராணிகள் மூலமாகச் செய்து நிரூபித்தார்.

மனித உடலிலேயுள்ள இந்த ஒரு வழிப் பாதைக் கருத்து, இன்றைய சாலைப் போக்குவரத்துகளிலும் காவல் துறையினர்களால் ஒழுங்காக நடத்தப் படுவதைப் பார்க்கிறோம் அல்லவா?

அந்த நேரத்தில் ஆர்வி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தங்கி பல அரிய ஆராய்ச்சிகளை ஆற்றி வந்தார்.

மன்னர் சார்லஸ், அப்போது நாடாளுமன்றத்தோடும் ஆலிவர் கிராம்வெல்லோடும் அடிக்கடி போர் செய்து வந்தார். அதனால், அவர் தோல்விகளையே கண்டு வந்தார்.

மருத்துவ உலகமும், மக்களும் தனது மருத்துவக் கண்டுபிடிப்புகளை எதிர்த்து ஏளனம் செய்து வந்தபோது, மன்னன் சார்லஸ் அவரது அறிவின் செல்வத்தைப் பாராட்டி அரசவை விருதுகளை அளித்துப் பெருமைபடுத்தியதற்கு நன்றியாக, புரட்சி ஏற்பட்டபோது மன்னன் செல்கின்ற இடங்களுக்கெல்லாம் சென்று தக்க ஆலோசனைகளை டாக்டர் ஆர்வி கூறி வந்தார்.

இங்கிலாந்து நாட்டில் புரட்சியை உருவாக்கியவர்கள் இதை அறிந்தார்கள். கடுங்கோபம் கொண்ட புரட்சிக்காரர்களின் கோபத் தீயிற்கு ஆர்வியினுடைய மருததுவக் கலைப் பகைவர்கள் காழ்ப்பு எண்-