உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு



பிளாஸ்டிக் பொருள்களால் செய்த வால்வுகளையும் - குழாய்களையும் நோயாளிகளுக்குப் பொருத்துவதையும் - ஏன், இதயத்தையே மாற்றியமைப்பதையும் கேள்விப் படுகிறோம்.

இரண வைத்தியர்கள், சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தும் பொழுது, உடல் முழுவதும் இரத்தம் ஓடிவரும்படி அதை இயக்கி வரும் அற்புதப் பம்புகளைக் கையாள்வதையும் கண்டு அதிர்ச்சியடைகிறோம்.

இந்த தற்கால அறுவை வைத்திய முறைகளுக்கெல்லாம் அடிப்பையாக அமைந்தது. டாக்டர் வில்லியம் ஆர்வியின் ஆராய்ச்சியினால் ஏற்பட்ட அறிவுதான் என்றால் மிகையாகாது!

அரும்பாடுபட்டுப் பல அற்புதங்களைக் கண்டு பிடித்து மனிதக் குலத்துக்கு உதவிய அந்த மகானை, மனித தெய்வத்தை, மருத்துவக் கலை மாமேதையை நாம் இரு கையெடுத்துக் கும்பிட்டு நன்றி பாராட்டுவோம்!

டாக்டர் வில்லியம் ஆர்வியை, அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு சாதாரண மருத்துவ நிபுணரைப் போலக் கூட அன்றைய சமுதாயம் மதிக்கவில்லை.

ஆனால், இன்று அவர் உலக உயிர்களை உய்விக்க வந்த ஒர் உத்தமராகவே உலகத்தால் உணரப்படுகிறார்! மதிக்கப்படுகிறார்!

டாக்டர் ஆர்வியை, எந்தப் பைத்தியக்கார உலகம் அவரைப் பைத்தியக்காரன் என்று இழித்தும் பழித்தும் கேவலமாக நடத்தியதோ, அதே