பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

95


பைத்தியக்கார உலகம்தான், இன்று அவரது இதயப் பரிசோதனையும், இரத்த ஒட்டக் கண்டுபிடிப்பையும் பயன்படுத்தி, உயிர்ப்பிச்சைப் பெற்று வாழ்ந்து கொண்டு வருவதைப் பார்க்கிறோம்.

மானிட சமுதாயம் என்றுமே மறக்க முடியாத சாதனைகளை டாக்டர் ஆர்வி உலகுக்குத் தந்து மாண்பு மிக்க மேதையானார்!

ஆனால், சாகும்போது மனம் கண்ணிர் வடித்தே பைத்தியம் போல் மரணமடைந்தார் - ஏன் தெரியுமா?

எந்த தாய் நாட்டுக்குத் தரணியிலே நல்ல பெயரும் புகழும் ஏற்படுத்த வேண்டுமென்று அல்லும் பகலும் பாடுபட்டு மருத்துவத் துறையில் அற்புதங்களைப் புகுத்தினாரோ, அந்த நாட்டு மக்களே தனது அறிவுச் செல்வங்களைத் தீயிட்டு அழித்ததைக் கண்டு அவரது ஆத்மா இரத்தக் கண்ணீரைச் சொரிந்து அழுதது!

அந்தக் கொடுமை மிக்க சம்பவமே அவரது உயிருக்கு எமனாகி விட்டது. அந்த சிந்தனையிலேயே அவர் நொந்து நொந்து மாண்டார்.

மனிதக் குலத்தை வாழ வைக்க வந்த மனித தெய்வத்தின் உயிர் பிரிந்தது! ஆம், காலமானார்.

மருத்துவ உலகில் டாக்டர் வில்லியம் ஆர்வி என்றும் மறக்க முடியாத ஒரு விடிவெள்ளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.