பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


5.கிருமிக் கிறுக்கன் பூச்சிப் பித்தன்


"டலிலே உள்ள கிருமிகளுக்குச் சாயம் ஏற்றுகிறானாம் உன்மத்தன்! - பைத்தியக்காரன்!!

"எவனாவது சாக்கடையிலே உள்ள நாற்றமடித்த கிருமிகளைப் பிடித்துச் சாயம் போடுவானா? இவனுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா?”

"வேலையற்ற வீணன்! சோற்றுக்கு வக்கு இல்லாத சோம்பேறி வெட்டிக்கு காலத்தைக் கழிக்கும் உதவாக் கரை."

"டாக்டராம். படித்திருக்கின்றானாம். நோயாளிகள் வேறு இவனைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். கட்டிய மனைவிக்குக்கூட சோறு போட முடியாத காலாடி".

"எவன் கொடுத்தான் டாக்டர் பட்டம் இவனுக்கு? மருத்துவப் படிப்பிலே மிகக் கெட்டிக்காரனாமே. பாவம், பிழைக்கும் பிழைப்பையாவது ஒழுங்காகக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாதா?

"பூச்சிகளுக்கு சாயம் போடும் இவனா- மனிதனின் நோய்களுக்கு மருந்து கொடுப்பான்? அவனையும் அறிவற்ற மக்கள் தேடி வருகிறார்களே! வேறு டாக்டரைத் தேடிப் போகாமல் இவனையே தேடி வருகிறார்களே”

செர்மன் நாட்டு மக்களிலே பலர், இவ்வாறு டாக்டர் பால் எர்லிக் என்பவரைப் பற்றி பலப்படப் பேசினார்கள்.