பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

97


கி.பி. 1853-ஆம் ஆண்டுக்கும் கி.பி. 1915க்கும் - இடையே வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் சிந்தனையாளர்களிலே ஒருவராகத் திகழ்ந்தார்.

அறிவியலில் மிகச் சிறந்த ஆராய்ச்சித் திறனிருந்தும், அவர் மருத்துவத் துறையிலே நாட்டங் கொண்டு, டாக்டராகப் பட்டம் பெற்றார்.

பெண்களிடம் ஒழுக்கக் கேடர்களாக நடந்து கொள்பவர்களுக்கு, மேக நோய் ஏற்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் - கண்டிருக்கிறோம்.

அந்தக் கொடுமையான நோய்க் கிருமிகளை ஒழிக்க அவருக்கு முன்பு எவருமே சிந்தித்ததே இல்லை.

டாக்டர் பால் எர்லிக் என்பவர்தான், அந்த நோய் பற்றியும் - அதை உருவாக்கும் கிருமிகளைப் பற்றியும் சிந்தித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

டாக்டர் பால் எர்லிக், கி.பி. 1853-ஆம் ஆண்டில் செர்மன் நாட்டில் பிறந்தார். சிறு வயது முதற் கொண்டே இவர் நுண் கிருமிகளை எல்லாம் பிடித்து, அதன் உடல் அமைப்புகளை ஆராய்வதே இவரது விளையாட்டு வேலையாக அமைந்தது.

நாளாக வாகப் பூச்சிகளைத் தேடிப் பிடிப்பதும் அவற்றை இனவாரியாகப் பிரித்து ஒவ்வொரு பாத்திரத்தில் இடுவதும், இரை போடுவதும் அதைக் கண்டு மகிழ்வதுமே அவருக்குரிய வேலையாக மாறி விட்டது.

பால் எர்லிக், அறிவியல் நூல்களை எல்லாம் படித்து முடித்தார். விஞ்ஞானத் துறையில் ஈடுபட அவருக்கு ஆர்வம் இருந்தது.