பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு



ஆனால், பெற்றோர்கள் இவரது ஊக்கத்தையும் விடா முயற்சியையும் அறிந்து இவரை மருத்துவத் துறையிலே படிக்க வைக்க விரும்பி எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.

மருத்துவக் கல்வி நிலையத்திலே சேர்ந்த எர்லிக், கற்க வேண்டியதை எல்லாம் நன்கு கற்று டாக்டராகப் பட்டமும் பெற்று விட்டார்.

டாக்டராகப் பணியாற்ற முற்பட்ட எர்லிக்கைப் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள முன் வந்தார்கள்.

பெற்றோர்கள், தனது மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட டாக்டருக்கு, தனது அழகு மனைவியிடம் கூடிப் பேசி இன்பமாக வாழ்வதைவிட, கிருமிகளிடமும், பூச்சிகளிடமும் விளையாடி மகிழ்வதே அவருக்குப் பேரின்பமாக இருந்தது.

கணவனை நம்பி வாழ்க்கை நடத்த வந்த கன்னிப் பெண்ணுக்குத் திருமணவிழா என்பது சடங்காக அமைந்ததே தவிர, சராசரி குடும்ப வாழ்க்கை கூட அந்த மங்கைக்கு கிடைக்கவில்லை - பாவம்!

டாக்டர் பால் எர்லிக், ஒரு சிறு நகரில் தனது மருத்துவப் பணியைத் தொடங்கினார்.

அவரது கல்வியின் மேன்மையினையும் - ஆய்வுத் திறனையும் அறிந்த அவ்வூர் மக்களும் சுற்றுப் புற மாந்தர்களும் கூட்டங் கூட்டமாக வந்து அவரிடம் சிகிச்சைப் பெறலாயினர். வந்த நோயாளிகளைக் கூட