பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

99


அவர் சரியாகக் கவனிப்பதில்லை. அப்படிக் கவனித் தாலும் அவசரக் கோலத்தோடு கவனிப்பார்.

வந்தவர்களைப் பரபரப்பாகப் பார்த்து விட்டு உடனே, ஒரு நிமிடமும் தாமதிக்காமல் குளம் குட்டைகளையும், நீர் நிலைகளையும் தேடிக் கொண்டு சென்று விடுவார் - பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வர.

எங்கே நாற்றமடித்த நீர் தேங்கிக் கிடக்கின்றதோ அங்கே எர்லிக் தவறாமல் காட்சி தருவார்.

நாற்றத்தையோ, அசுத்தங்களையோ, கழிவுப் பொருள்களின் தோற்றத்தையோ கண்டு, கடுகளவும் மன அருவருப்பும் படமாட்டார்.

கையை விட்டு, அல்லது அந்த நீர் நிலைகளிலேயே இறங்கி, பூச்சிகளை வாரி வாரிப் பாத்திரங்களிலே போடுவார்.

இதை வேடிக்கைப் பார்ப்போர் கைகொட்டிச் சிரிப்பார்கள்.

வேறு சிலர், டாக்டர் சாக்கடை வாருகிறார் பாருங்கள் என்று ஏளனம் பேசுவார்கள்!

இவர் பூச்சிகளைப் பிடிப்பதைப் பார்க்கவே குறிப்பிட்ட நீர் நிலைகளிடம், வேலையற்றவர்கள் சிறுசிறு கூட்டமாகக் கூடி விடுவார்கள்.

அவர்கள் இவரைக் கிண்டலும் கேலியும் செய்தபடியே இருப்பார்கள்! டாக்டர், பூச்சிப் பிடிக்கும் வேலையை ஒழுங்காகச் செய்தபடியே இருப்பார்.